பக்கங்கள்

பக்கங்கள்

14 ஆக., 2013

வெலிவெரியவில் துப்பாக்கிச் சூடு நடத்திய இராணுவத்தினர் அடையாளம் காணப்பட்டனர்
கம்பஹா மாவட்டம், வெலிவேரிய ரத்துபஸ்வலவில் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய ஒரு தொகுதி இராணுவத்தினர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பொலிஸார் நடத்திய விசாரணைகளின் மூலம் துப்பாக்கிச் சூடு நடத்திய இராணுவத்தின் ஒரு பகுதியினர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடாத்த உத்தரவிட்ட இராணுவ அதிகாரியும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான ஆரம்ப விசாரணை அறிக்கையை பொலிஸார் அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, போராட்டம் நடத்தப்பட்ட போது யார் இராணுவத்திற்கு அழைப்பு விடுத்தார்கள் என்பது தமக்கு தெரியாது என கம்பஹா உயர் பொலிஸ் அதிகாரிகள் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் இராணுவத்தினர் தனியான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.