பக்கங்கள்

பக்கங்கள்

22 ஆக., 2013

"மெட்ராஸ் கபே" தமிழர்கள் அனைவரும் பார்க்க வேண்டி படம்: இளைஞர் காங். மாநில துணைத் தலைவர்
நடிகர் ஜான் ஆபிரகாம் நடித்துள்ள படம் மெட்ராஸ் கபே. தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் இந்தப் படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனால் அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகளுக்கு இப்படத்
தை அதன் தயாரிப்பாளர்கள் திரையிட்டு காண்பித்து வருகின்றனர்.

இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் விஜய் இளஞ்செழியன், பொதுச்செயலாளர் அனுராதா அபி உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு சென்னையில் மெட்ராஸ் கபே படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது.
அதன்பிறகு இப்படம் குறித்து விஜய் இளஞ்செழியனிடம் கேட்டபோது, மெட்ராஸ் கபே படத்தில் தமிழர்களுக்கு எதிரான காட்சிகள் எதுவும் இல்லை. மாறாக தமிழர்களை நல்லவிதமாகவே சித்திரித்துள்ளனர். அதனால் தமிழர்கள் அனைவரும் பார்க்க வேண்டி படம் என்றார்.