பக்கங்கள்

பக்கங்கள்

31 ஆக., 2013

அஜங்கனின் தந்தையை தடுப்புக்காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு! நெஞ்சு வலியென்று வைத்தியசாலையில் தஞ்சம்
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜனின் தந்தையான இராமநாதனை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க சாவகச்சேரி நீதிவான் எஸ்.லெனின்குமார் உத்தரவிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சக வேட்பாளராக சர்வானந்த் என்பவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பாகவே இந்த உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரியில் கடந்த 27ம் திகதி இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இராமநாதன், கடந்த இரண்டு நாட்களாக பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று அவரை பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்படுத்தினார்கள். இதேவேளை அங்கஜனின் மெய்பாதுகாவலர் மீது மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படும் துப்பாக்கி பிரயோகம் தொடர்பாகவும் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இந்த வழக்கில் பிணைக்காக அங்கஜன் தரப்பினர் விண்ணப்பித்த போதும் அதனை நிராகரித்த நீதவான், யாழ்.மேல் நீதிமன்றிற்கு மாத்திரமே பிணை வழங்க அதிகாரம் உண்டு என சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது சிறைக்கு கொண்டு செல்லப்பட்ட இராமநாதன் நெஞ்சு வலியென்று யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கின் விசாரணைகள் அடுத்த மாதம் 13ம் திகதி மீண்டும் இடம்பெறவுள்ளன.
யாழ்ப்பாணத்தில் நடைபெறும் இந்த சம்பவங்களால் அரசாங்கம் தனது செல்வாக்கினை முற்றாக இழந்துள்ளதாக கருத்துக்கள் எழுந்துள்ளன.