பக்கங்கள்

பக்கங்கள்

30 ஆக., 2013

சிரியாவுக்கு ஆதரவாக ரஷ்ய போர்க் கப்பல்கள் விரைந்தன

சிரியாவின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால், சிரியாவுக்கு ஆதரவாக ரஷ்ய போர்க் கப்பல்கள் விரைந்துள்ளன.
இரசாயன தாக்குதல் நடத்தி பொதுமக்களை கொன்று குவித்ததாக அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் சிரியாவுக்கு எதிராக போர் தொடுக்க உள்ளன.
இது தொடர்பாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.
ஆனால் சிரியா மீது தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுப்போம் என ரஷ்யாவும், ஈரானும் எச்சரிக்கை விடுத்துள்ளன.
இந்நிலையில் மத்திய தரைக்கடலை சுற்றிய பகுதிகளில் நிறுத்தப்பட்டிருக்கும் ரஷ்ய போர்க் கப்பல்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன.