பக்கங்கள்

பக்கங்கள்

27 ஆக., 2013

ஆற்காடு வீராசாமி ஆஸ்பத்திரியில் அனுமதி
திமுக முதன்மை செயலாளர் ஆற்காடு வீராசாமி சென்னை அண்ணாநகரில் உள்ள வீட்டில் தினமும் காலையில் நடைபயிற்சி செல்வார். நடைபயிற்சி செல்லும் போது உதவியாளர் ஒருவர் துணைக்கு செல்வார். நேற்று முன்தினம்
காலையில் உதவியாளர் இல்லாமல் நடைபயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.


அப்போது கால் தடுமாறி கீழே விழுந்துவிட்டார். இதில் அவருக்கு இடது பக்க இடுப்பின் கீழ் பகுதியில் பலத்த அடிபட்டது. மேலும் கையிலும் காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவரை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். டாக்டர்கள் உடல் நிலையை பரிசோ தித்து உடனடியாக ஆபரேசன் செய்தனர். அவரது உடல் நிலை தேறிவருகிறது. இன்னும் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.