பக்கங்கள்

பக்கங்கள்

24 ஆக., 2013

தமிழ் ஊடகத்துறையில் புதிய வரவாக “ நமது முரசொலி“ இன்று யாழில் வெளிவருகின்றது
தமிழ் சமூகத்தில் பிரங்ஞையுடைய இளையவர்களின் முயற்சியினால் ஆற்றலும் அனுபவமும் கொண்டவைகளை ஒருமுகப்படுத்தி “செய்வதை துணிந்து செய், சொல்வதை தெளிந்து சொல்“ என்ற மகுடவாசகத்துடன் நமது முரசொலி என்கின்ற வாரப்பத்திகை ஒன்று இன்று யாழில் வெளியாகின்றது .
முதல் பதிப்பில் “தமிழ் வாக்களிப்பு பாரம்பரியம்“ என்ற நிலாந்தனின் கட்டுரையும் , “நிராகரிப்புக்கு இன்னும் தாமதம் ஏன்“ என்ற பார்த்தீபனின் கட்டுரையும் வடமாகானசபைத் தேர்தல் மக்களுக்கு விடிவைத்தருமா என்ற தேர்தல்களத்தில் நிற்கும் அபேட்சகர்களின் பதிவுகளும், சமகால வாழ்வியலை இலக்கிய நயத்துடன் “இனியும் முட்செடிகள் முளைக்கலாம்“ என்ற வளவனின் சிறுகதையும் அரசியல் சமூக விடயங்களை பிரதிபலிக்கும் சுவாமி வம்பானந்தாவின் நையாண்டி என பல ஆக்கங்களைதாங்கி வெளியாகின்றது
தமிழ் சமூகத்தில் நிகழ்கின்ற நிகழ்ந்த நிகழ்வுகள் அனைத்தும் ஏதோ வகையில் எம் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் வெட்டவெட்ட தளைக்கும் மரம்போல வேர்களில்லிருந்து வீறுடன் உயிர்ப்புக்களை வெளிப்படுத்தும் சக்தியே எமதுமண்ணின் தனித்துவம் அந்தவகையில் நமது முரசொலியை வாழ்த்துவோமாக