பக்கங்கள்

பக்கங்கள்

6 ஆக., 2013

பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது! காங்கிரஸுடன் தமது உறவு முறியலாம்!- திமுக
கொழும்பில் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது.  அவ்வாறு பங்கேற்றால் மத்திய அரசாங்கத்துடன் தமது உறவு இருக்காது என்று திராவிட முன்னேற்றக் கழகம் எச்சரித்துள்ளது.
கழகத்தின் பேச்சாளர் இளங்கோவன் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
கொழும்பு மாநாட்டை இந்தியா புறக்கணிக்கவேண்டும் என்று திமுக ஏற்கனவே மத்திய அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
எனினும் அதற்கு மத்திய அரசாங்கம் உரிய பதிலை வழங்கவில்லை என்றும் இளங்கோவன் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பொதுநலவாய நாடுகள் மாநாடு நடைபெற்று அடுத்த இரண்டு வருடங்களுக்கு அதன் தலைமை மஹிந்த ராஜபக்சவிடம் செல்லுமானால் பிராந்தியத்தில் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்றும் இளங்கோவன் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏற்கனவே இலங்கையுடன் நட்பு நாடு என்ற நிலைப்பாட்டை கைவிடுமாறு அதிமுக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியபோதும் மத்திய அரசாங்கம் அதனை நிராகரித்திருந்தது.
இந்தநிலையிலேயே திமுகவின் எச்சரிக்கை வெளியாகியுள்ளது.