பக்கங்கள்

பக்கங்கள்

10 ஆக., 2013

பொலிஸ், காணி அதிகாரங்கள் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ளதால் அதை யாரிடமும் கேட்க வேண்டியதில்லை: விக்னேஸ்வரன்
அரசியல் அமைப்புச் சட்டத்தில் மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதால், அதனை புதிதாக எவரிடமும் கேட்க வேண்டிய அவசியமில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளரும் முன்னாள் நீதியரசருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
எவரும் பொலிஸ், காணி அதிகாரங்களை எங்களுக்கு தர வேண்டியதில்லை. அது சட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. அதனை ஜனாதிபதியினால் வழங்காதிருக்க முடியாது.
பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்க போவதில்லை என எவராது கூறினால் அது பொய்யான கதை. பொலிஸ், காணி அதிகாரங்கள் வேண்டுமா என எவராவது கேட்டால் அது தவறான கேள்வி என விக்னேஸ்வரன் மேலும் கூறியுள்ளார்.