பக்கங்கள்

பக்கங்கள்

4 ஆக., 2013

வெலிவேரியவில் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞனின் மரணத்துக்கு அரசு பொறுப்புக் கூறவேண்டும்: பொன்சேகா

வெலிவேரியவில் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞனின் மரணத்திற்கு அரசு மற்றும் இராணுவம் ஆகியன பொறுப்புக்கூற வேண்டும் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவமானது இராணுவத்திற்கு அழிக்கமுடியாத கரும்புள்ளியெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கோரி வெலிவேரிய, ரதுபஸ்வெல பிரதேச மக்கள் நடத்திய ஆரப்பாட்டத்தின் மீது இராணுவம் நடத்திய தாக்குதலில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளோரை பார்வையிடச் சென்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சாதாரணமான உரிமையைக் கேட்ட மக்களின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடாதோர் மீதும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாகவும் முன்னாள் இராணுவ வீரன் என்ற வகையில் இதை நினைத்து வெட்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்
.