பக்கங்கள்

பக்கங்கள்

30 ஆக., 2013



த.தே.கூட்டமைப்பின் வேட்பாளர் ஐங்கரநேசன் வீட்டில் கழிவு ஒயில் வீசித் தாக்குதல்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் ஐங்கரநேசன் வீட்டின் மீது இனம்தெரியாத நபர்கள் கழிவு ஒயில் வீசியுள்ளதுடன், வீட்டு வாசலின் முன்பாக பூசணிக்காய் வெட்டி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று நள்ளிரவு யாழ். திருநெல்வேலி பிரதேசத்தில் அமைந்துள்ள அவரது வீட்டுக்கே இவ்வாறு கழிவு ஒயில் வீசித் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச் சம்பவம்
தொடர்பாக கோப்பாய் பொலிசில் முறைப்பாடு செய்யவுள்ளதாக ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.