பக்கங்கள்

பக்கங்கள்

20 ஆக., 2013

கனடா, இந்தியாவில் பேசுவதால் பிரச்சினைகளுக்கு தீர்வு வராது : ஜனாதிபதி

வடக்கில் இருப்பவர்கள் கனடா, இந்தியா உட்பட வெளிநாடுகளில் சென்று பிரச்சினைகள் குறித்து பேசிக்கொண்டிருக்கின்றனர். இதனால் எதுவும் நடக்காது. எமது உள்நாட்டு பிரச்சினையை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்துதான் பேசித் தீர்க்க வேண்டும். இதனைக் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மலையக மக்களும் இந்த நாட்டின் உயிர்நாடிகள்தான். இதனை யாரும் மறுக்க முடியாது. நாம் அனைவரும் இலங்கை தாயின் பிள்ளைகள். உங்களுக்கும் அனைத்து உரிமைகளும் உண்டு. இதில் எந்த வேறுபாடும் காட்டப்படமாட்டாது. பொய்பிரசாரங்களை நம்ப வேண்டாம். நான் உங்கள் அனைவரையும் பாதுகாப்பேன் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நுவரெலியாவில் புதிய மாநகர சபை காரியாலயத்தையும் கிரகறி வாவியின் இரண்டாம் கட்ட அபிவிருத்தி வேலைத்திட்டத்தையும் நேற்று திறந்து வைத்து அங்கு உரையாற்றும் பொழுதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.