பக்கங்கள்

பக்கங்கள்

2 ஆக., 2013

கடும் வரட்சியால் நீரின்றி தீவகத்தில் மாடுகள் இறப்பு
தீவகப் பகுதிகளில் குறிப்பாக மண்டைதீவு மண்கும்பான், அல்லைப்பிட்டி ஆகிய பிரதேசங்களில் கட்டாக்காலி மாடுகள் நீரின்றி இறக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்களால் தெரிவிக்கப்படுகிறது.

இப்பிரதேச வயல் நிலப்பகுதிகளுக்கும் கடற்கரை யோரப்பகுதிகளிலும் பல எண்ணிக்கையான கட்டாக்காலி மாடுகள்; நிற்கின்ற நிலையில் தற்போது நிலவும் கடும் வரட்சியால் நீர் நிலைகளில் நீரின்றி மாடுகள் இறந்து கிடக்கின்றன.
முன்னைய காலங்களில் பிரதேச சபையினால் பரல்கள் வைக்கப்பட்டு நீர் இறைக்கப்பட்டதுடன் இதனால் மாடுகள் நீரை அருந்தி நாடமாடின இம்முறை இச்செயற்பாடுகள் மேற் கொள்ளப்படவில்லை எனவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனினும் மேலும் கட்டாக்காலி மாடுகள் இறப்பதை தவிர்க்கும் வகையில் மாடுகளுக்கு நீரை வழங்க பிரதேச சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.