பக்கங்கள்

பக்கங்கள்

27 ஆக., 2013

ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட நகை, உட்பட அசையும் சொத்தை ஒப்படைக்கக் கோரி திமுக புதிய மனு
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் புதிய மனு ஒன்றை பெங்களூரு சிறப்பு
நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

அதில், ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட நகை உட்பட அசையும் சொத்தை ஒப்படைக்க வேண்டும். அசையும் சொத்துக்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும்வரை வழக்கை நடத்தக் கூடாது என்று கூறியிருந்தார்.
க.அன்பழகன் மனுவுக்கு செப்டம்பர் 2ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு ஜெயலலிதாவுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 
ஜெயலலிதாவிடம் 1997ல் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் ஆர்.பி.ஐ. பாதுகாப்பில் உள்ளன.