பக்கங்கள்

பக்கங்கள்

26 ஆக., 2013


சோனியாகாந்தி
மருத்துவமனையில் அனுமதி
 

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.  நேற்று இரவு முதல் சோனியாவுக்கு காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது.  


இந்நிலையில் இன்று அவர் உணவு பாதுகாப்பு மசோதா காரசார விவாதத்தில் பங்கேற்றார்.   மக்களவையில் உணவு பாதுகாப்பு மசோதா வாக்கெடுப்பின்போது உடல்நலக்குறைவால் சோனியாகாந்தி பாதியிலெயே வெளியே சென்றா ர்.  அவருடன் ராகுல்காந்தியும் சென்றார். 


அங்கிருந்து நேராக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்றார் சோனியா.   மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.