பக்கங்கள்

பக்கங்கள்

23 ஆக., 2013

சுவிசில் அகதி அந்தஸ்து கோருவோர் மீது முறையான DNA சோதனை நடத்தவேண்டும் என சுவிஸ் அரசாங்கத்திடம் ஒருசாரார் வேண்டுகொள் விடுத்துள்ளனர்.
சுவிஸிற்கு தங்கள் குடும்பத்தாருடன் இணைவதற்கு என்று வருகின்ற அகதி அந்தஸ்து கோருவோர்மீது குறிப்பாக எரித்திரி நாட்டைச் சேர்ந்தவர்கள் மீது
இச்சோதனை நடாத்தப்பபடவேண்டும் என வேண்டுகொள் விடுக்கப்பட்டதாக தெரியவருகின்றது.
சுவிஸில் அகதி அந்தஸ்து கோருவோரில் அதிகமானோர் எரித்திரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது 6000 எரித்திரியர்களுடைய விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. குடும்பங்களோடு மீளிணைதல் என்கின்ற வகையில் அகதி அந்தஸ்து கோருவோர்களில் அதிகளவானோர் எரித்திரியர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த DNA சோதனை உண்மையிலேயே அவர்கள் ஒரே குடும்பத்தை சேரந்தவர்கள் தான என்பதனை உறுதிப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜுன் மாதம், சுவிஸ் தனது அகதி அந்தஸ்து வழங்குவது சம்பந்தமான சட்டங்களை பெரிதும் கடுமையாக்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.