பக்கங்கள்

பக்கங்கள்

2 செப்., 2013

குழியில் விழுந்து சிறுவன் பலி : காத்தான்குடியில் சம்பவம்

குழி தோண்டிக்கொண்டிருந்த வேளையில் குழியில் விழுந்து ஐந்து வயது சிறுவனொருவன் பலியான சம்பவமொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் காத்தான்குடி விடுதி வீதி 03ஆம் குறுக்கு லேனில்
இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் தெரிய வருவதாவது,

குறித்த விடுதி வீதி 03ஆம் குறுக்கு லேனில் அமைந்துள்ள வீடொன்றில் வீட்டுத் தேவைக்காக ஒரு குழியொன்று தோண்டப்பட்டுள்ளது. இவ்வேளையில் குழிக்கு அருகாமையில் இருந்த அந்த வீட்டைச் சேர்ந்த இரு சிறுவர்கள் குழி சரிந்ததனால் குழியில் விழுந்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் முஹம்மட் ஆதில் வயது 5 எனும் சிறுவன் காத்தான்குடி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் போதே மரணித்துள்ள அதேவேளை, மற்றைய சிறுவன் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை காத்தான்குடிப் பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன்; மரணித்த சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.