பக்கங்கள்

பக்கங்கள்

10 செப்., 2013

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அறிமுகம் !

போருக்கு பிந்திய இலங்கைத்தீவின் சூழலில் தமிழர்களுக்கான சுதந்திரமான அரசியல் வெளி அற்ற நிலையில் ,இலங்கைத்தீவுக்கு வெளியே தோற்றம் பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் , எதிர்வரும் ஒக்ரோபர்
1ம் நாளுடன் தனது முதலாம் தவணை அரசவையினை நிறைவு செய்கின்றது.

இந்நிலையில் இரண்டாம் அரசவைக்கான பிரதிநிதிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் , ஒக்ரோபர் 26ம் நாள் புலம்பெயர் தேசங்களெங்கும் இடம்பெறவுள்ளது.

இதற்கான பணிகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையம் முன்னெடுத்து வரும் நிலையில் , தேர்தல் தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிக்கைகளை அனைவரும் அறிந்திருக்கும் பொருட்டு தேர்தல் ஆணையம் இணையத்தளமொன்றினை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

www.tgte-ec.com இந்ந இணையத்தளத்தின் ஊடாக தேர்தல் தொடர்பில் வாக்காளர்களும் வேட்பாளர்களும் தகவல்களை நாடுவாரியாக தெரிந்து கொள்ள முடியுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.