பக்கங்கள்

பக்கங்கள்

9 செப்., 2013

சென்னையில் விநாயகர் ஊர்வலம் : 10 ஆயிரம் போலீசார் குவிப்பு
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக சென்னையில் 10 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட உள்ளனர். நாளை விநயாகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு 1705 இடங்களில் விநாயகர் சிலை வைக்க போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.


இந்த சிலைகள் ஒரு வாரத்திற்கு பிறகு கடலில் கரைக்கப்படும். இந்து அமைப்புகள் சார்பில் 4 நாட்கள் ஊர்வலம் நடத்தப்பட உள்ளது. இதனையடுத்து போலீஸ் ரோந்து தீவிரப்படுத்தப்பட உள்ளது. ஊர்வலம் நடைபெறுவதை முன்னிட்டு ஒரு வாரத்திற்கு 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட உள்ளனர்.