பக்கங்கள்

பக்கங்கள்

10 செப்., 2013


புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளில் 107 பேர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய சமூகத்துடன் இன்று இணைக்கப்பட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு வெலிகந்தை, பூந்தோட்டம் ஆகிய தடுப்பு முகாமில் புனர்வாழ்வு பெற்றவர்களே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில் 101 முன்னாள் ஆண் போராளிகளும் 06 பெண் போராளிகளும் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலிகளில் 11 ஆயிரத்து 651 பேர் இதுவரையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் 339 பேர் இன்னும் புனர்வாழ்வு பெற்றுவருகின்றனர் என சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர் ஜி.ஏ.வித்தானகே தெரிவித்தார்
€€