பக்கங்கள்

பக்கங்கள்

2 செப்., 2013

யாழ் தேவி எதிர்வரும் 14 முதல் கிளிநொச்சியில் 
 கொழும்பில் இருந்து வவுனியா, ஓமந்தை வரை தற்போது சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வரும் யாழ் தேவி ரயில் எதிர்வரும் 14 ஆம் திகதியில் இருந்
து கிளிநொச்சி வரை தனது பயணத்தை ஆரம்பிக்க உள்ளதுடன் அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் யாழ்பாணம் வரை விஸ்தரிப்பதற்கு ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
 
வடபகுதிக்கான ரயில் பாதையின் கிளிநொச்சி வரையான பாதை நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் அண்மையில் பரீட்சார்த்த ஓட்டம் நடைபெற்றது.
 
ரயில் சேவை கிளிநொச்சி வரை ஆரம்பிக்கப்பட உள்ளதால், வவுனியாவில் இருந்து 44 நிமிடங்களில் கிளிநொச்சியை சென்றடையலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சுமார் 23 வருடங்களின் பின்னர் கிளிநொச்சி வரை ரயிலில் பயணிப்பதற்கான வாய்ப்பு மக்களுக்கு கிடைக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 
இதனையொட்டி நான்கு ரயில் நிலையங்களும் திறக்கப்படவுள்ளதாக ரயில்வே வணிக அத்தியட்சகர் ஜி.டபிள்யூ.ஏ.சிசிர குமார தெரிவித்துள்ளார்.