பக்கங்கள்

பக்கங்கள்

1 அக்., 2013

சூரிச் விமானத்தில் 1.6 மில்லியன் யூரோ மதிப்புள்ள 50 கிலோ தங்கம் பறிமுதல்

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகருக்கு செல்லும் விமானத்தில் தங்கம் கடத்தியதாக 6 நபர்கள் பிரான்ஸ் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரான்ஸிலிருந்து சுவிட்சர்லாந்தின் சூரிச் நகருக்கு செல்லும் விமானத்தில் 6 பேர் கொண்ட கும்பல் தங்கம் கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.
பின்பு அவர்களிடம் விசாரணை நடத்தியதில் செப்டம்பர் 19ம் திகதி திருடப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.
மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 50 கிலோ எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சமீபத்தில் பிரான்ஸ் பொலிசார் 1.3 டன் கோகைன் அடங்கிய 30 சூட்கேஸ்களை தலைநகரான பாரிசில் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.