பக்கங்கள்

பக்கங்கள்

20 செப்., 2013


சுவிஸ் தூண் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் சனீஸ்வர வழிபாடு
 (புரட்டாதி சனி நாட்கள் )
 

சுவிட்சர்லாந்து தூண் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் எதிர்வரும் 21.28 மற்றும் ஒக்ரோபர் 5,12 ஆகிய தினங்களில் இவ்வாலயத்தில் சனீஸ்வர வழிபாடு மிகவும் சிறப்பாக நடைபெற இருப்பாதால் அடியார்கள்  சனீஸ்வரனை வேண்டி விரதம் இருந்து சனீஷ்வர தோஷ வழிபாடு செய்து உங்கள் வாழ்வை நலமாக்கி கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்

சனீஸ்வர பகவானுக்கு உகந்த தினங்கள் இவை என்பதால்  அடியார்கள் அவருக்கு எள்ளெண்ணை தீபம் ஏற்றி கரு நீல (குவளை) மலர்களால் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தால் சனீஸ்வர தோஷம் நீங்கப் பெற்று நல்வாழ்வு பெறுவார்கள்

சனீஸ்வர தோஷம் உள்ளவர்கள் -ராசிகள்-நட்சத்திரங்கள் 

ஏழரை சனி

கன்னி  ராசி  (உத்தரம் 2.3.4 ஆம் கால்கள் ,அத்தம் -சித்திரை 1.2 ஆம் கால்கள்  )
துலாம் ராசி (சித்திரை 1.2 ஆம் கால்கள் ,சுவாதி ,விசாகம் 1.2 ,3ஆம் கால்கள் )
விருச்சிகம் (விசாகம் 4 ஆம் கால் ,அனுஷம் ,கேட்டை )

அட்டமத்து சனி

 மீன ராசி  (பூரட்டாதி 4 ஆம் கால் .,உத்தரட்டாதி, ரேவதி )

 7 ஆம் இடத்து சனி

மேட ராசி (அஷ்வினி, பரணி. கார்த்திகை 1 ஆம் கால் )

4 ஆம் இடத்து சனி

கடக ராசி ( புனர்பூசம் 4 ஆம் கால், பூசம் ,ஆயிலியம் )