பக்கங்கள்

பக்கங்கள்

14 செப்., 2013

ஐநா மாநாட்டில் உரையாற்ற மகிந்த ராஜபக்ச 23ம் திகதி நியூயோர்க் பயணம்
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் 23ம் திகதி திங்கட்கிழமை நியூயோர்க் பயணமாகவுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டில் உரையாற்றுவதற்காகவே அவர் நியூயோர்க் செல்லவுள்ளதாக அந்த வட்டாரத் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
 நியூயோர்க் செல்லும் மகிந்த ராஜபக்ச, அங்கு இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட அரச தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவிருப்பதாகவும் அந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆறு நாட்கள் நியூயோர்க்கில் தங்கியிருப்பார் என்றும், அமைச்சர்களான ஜி.எல்.பீரிஸ், நிமல் சிறிபாலடி சில்வா மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோரும் அவருடன் செல்லவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.