பக்கங்கள்

பக்கங்கள்

21 செப்., 2013

சிரியா புரட்சி படை வீரர்களுடன் செக்ஸ் உறவு வைக்கும் துனிசியா பெண்கள்

சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல்–ஆசாத் தலைமையிலான ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் 2 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.
அவர்களுக்கு ஆதரவாக புரட்சிபடை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஜனாதிபதி ஆசாத்தின் ராணுவத்துடன் போரிட்டு வருகின்றனர்.
இதை ஒரு புனித போராக கருதுகின்றனர். இவர்களுக்கு துனிசியாவை சேர்ந்த இளைஞர்கள் ஆதரவு தெரிவித்து புரட்சி படையில் சேருகின்றனர்.
இந்த நிலையில், துனிசியாவில் உள்ள சன்னி பிரிவை சேர்ந்த இளம்பெண்கள் புரட்சிபடை வீரர்களுடன் ‘செக்ஸ்’ உறவு கொள்ள சிரியா செல்கின்றனர். பின்னர் கர்ப்பிணிகளாக துனிசியா திரும்பும் அவர்கள் குழந்தைகளை பெறுகின்றனர்.
இதை புனிதமாக அவர்கள் கருதுகின்னர். ‘ஜிகாத் அல் நிகாஹ்’ என அழைக்கின்றனர். இந்த தகவலை துனிசியா உள்துறை மந்திரி லாட்பிபென் ஜெட்டோ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும், கடந்த மார்ச் மாதம் வரை புனித போரில் பங்கேற்க சிரியா சென்ற 6 ஆயிரம் இளைஞர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.