பக்கங்கள்

பக்கங்கள்

22 செப்., 2013

30 ஆசனங்களுடன் ஆட்சியைப் பிடித்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – சிறிலங்கா அரசுக்குப் பேரிடி

வடக்கு மாகாணசபைத் தேர்தலில், மாபெரும் வரலாற்று வெற்றியைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 30 ஆசனங்களுடன் - மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான பலத்துடன் ஆட்சியைப் பிடித்துள்ளது.

வடக்கு மாகாணசபையில், இரு போனஸ் ஆசனங்கள் உள்ளிட்ட, 38 ஆசனங்களுக்கான தேர்தலில், சுமார் 80 வீதமான வாக்குகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுள்ளது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட 20 ஆசனங்களில், 14 ஆசனங்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றி பெரும் வெற்றி பெற்றுள்ளது.

அதிகளவு ஆசனங்களைப் பெற்ற கட்சி என்ற வகையில், இரு போனஸ் ஆசனங்களும் கூட்டமைப்புக்கே கிடைப்பது உறுதியாகியுள்ளது.

யாழ்.மாவட்டத்€€€தில், 213,907 வாக்குகளைப் பெற்ற கூட்டமைப்புக்கு 14 ஆசனங்கள் கிடைத்துள்ளன. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 2 ஆசனங்களே கிடைத்துள்ளன.

இதன் மூலம், வடக்கு மாகாணசபையில் 30 ஆசனங்களைக் கைப்பற்றி,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைக்கவுள்ளது.

மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு 26 ஆசனங்களே போதும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்பாராத பாரிய வெற்றியையும், சிறிலங்கா அரசாங்கத்துக்கு பெரும் அதிர்ச்சியையும் தமிழ்மக்கள் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.