பக்கங்கள்

பக்கங்கள்

14 செப்., 2013

மருத்துவமனையில் தீ: ரஷ்யாவில் 37 பேர் பலி
ரஷ்யாவில், மனநல மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில், 37 பேர் கருகி பலியாயினர். ரஷ்யாவின், நோவ்கோராட் பகுதியில் உள்ள,
மனநல மருத்துவமனையில், 60க்கும் அதிகமான நோயாளிகள், சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த மருத்துவமனையில், நோயாளி ஒருவர் சிகரெட் பிடித்துள்ளார். அவர் வீசி எறிந்த சிகரெட் துண்டின் தீ, படுக்கையில் பரவி, மரத்தாலான இந்த மருத்துவமனை முற்றிலும் சேதமடைந்தது. நோயாளிகளை காப்பாற்ற முயன்ற நர்ஸ் உட்பட, 37 பேர் இந்த தீ விபத்தில் கருகி பலியாயினர். 20 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.