பக்கங்கள்

பக்கங்கள்

25 செப்., 2013

டுவிட்டரில் பதிலளிக்கும் ஜனாதிபதி மகிந்த
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் சபையின் 68வது பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றிய பின்னர், நியூயோர்க்கில் இருந்தவாறு டுவிட்டர் மூலம் கேள்விகளுக்கு பதிலளிக்க உள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி இன்று பிற்பகல் பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளார்.
இதனையடுத்து நாளைய தினம் நியூயோர்க் நேரம் காலை 9 மணி (இலங்கை நேரம் மாலை 6.30)க்கு டுவிட்டரில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க உள்ளார்.

சுமார் 30 நிமிடங்கள் டுவிட்டரில் பதிலளிக்கும் ஜனாதிபதி மகிந்த, ஐ.நா கூட்டம் தொடர்பாகவும் நியூயோர்க்கில் தங்கியிருக்கும் காலத்தில் அவரது உத்தியோகபூர்வ பணிகள் பற்றியும் பதிலளிப்பார் என அவரது ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
@PresRajapaksa என்ற டுவிட்டார் கணக்கில் ஜனாதிபதி மகிந்த கேள்விகளுக்கு பதிலளிக்க உள்ளார்.
பதிலளிக்கும் காலம் குறுகிய காலமாக இருப்பதால் கேள்விகளை கேட்பவர்கள் உடனடியான ஜனாதிபதியின் டுவிட்டார் கணக்கில் கேள்விகளை பதிவிடுமாறு ஊடகப் பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.
கேள்வி கேட்கும் போது #AskMR என்று பயன்படுத்துமாறும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு கேட்டுள்ளது