பக்கங்கள்

பக்கங்கள்

5 செப்., 2013

நடிகர் விஷால் மருத்துவமனையில் அனுமதி
நடிகர் விஷால் கதாநாயகனாக நடித்த ‘மதகஜராஜா’ படம் 6–ந்தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தை தமிழ்நாடு முழுவதும் வெளியிடும் உரிமையை நடிகர் விஷால் வாங்கியிருக்கிறார். விஷால் பிலிம்
பாக்டரி சார்பில் மத கஜராஜா படம் வெளியிடப்படுகிறது. படத்தை தமிழ்நாடு முழுவதும் வெளியிடும் முயற்சியில் விஷால் தீவிரமாக ஈடுபட்டு இருந்தார்.

இந்த நிலையில் அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு ரத்த அழுத்தம் திடீரென்று குறைந்தது. உடனடியாக அவரை சென்னை அடையாறில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.