பக்கங்கள்

பக்கங்கள்

27 செப்., 2013

மாத்தறை சிறையிலிருந்து தப்பியோடிய புலி உறுப்பினர் நாட்டை விட்டு வெளியேற்றம்: சிங்கள ஊடகம்
மாத்தறைச் சிறையிலிருந்து தப்பியோடிய முக்கிய விடுதலைப் புலி உறுப்பினர், நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஒரு மாத காலத்திற்கு முன்னதாக குறித்த முன்னாள் புலி உறுப்பினர் வெளிநாடு ஒன்றுக்கு தப்பிச் சென்றுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேக நபரை மாத்தறைக்கு அழைத்துச் செல்ல பரிந்துரை செய்த சிறைச்சாலை அதிகாரிகள் தொடர்பில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அதிகாரிகள் குறித்த விசாரணைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்