பக்கங்கள்

பக்கங்கள்

13 செப்., 2013

நுவரெலியாவில் கடும் மழை : இயல்பு நிலை பாதிப்பு

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடை மழையினால் நுவரெலியா அம்பகமுவ, கொத்மலை, வலப்பனை பிரதேசங்களில் பல வீடுகள்
பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை அந்தந்த பிரதேச செயலகங்கள் மூலம் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நுவரெலியா மாவட்ட செயலாளர் டி. பி. ஜி. குமாரசிறி தெரிவித்தார்.

மேலும் நுவரெலியா மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழையினால் பல பிரதேசங்களில் மண்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமெனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தொடர்ந்து பெய்துவரும் மழையினால் கடந்த சில தினங்களாக இப் பிரதேச மக்களின் இயல்பு நடவடிக்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு உருளைக்கிழங்கு, மரக்கறி உற்பத்தியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்