பக்கங்கள்

பக்கங்கள்

19 செப்., 2013

பாடசாலையில் பிள்ளையை அனுமதிப்பதற்காக தாயிடம் பாலியல் இலஞ்சம் பெற முயற்சித்த கொட்டாவ பகுதி பாடசாலை அதிபர் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது பிரதான நீதவான் கிஹான் பலபிட்டிய அவரை பிணையில் செல்ல அனுமதித்தார்.

இதன்படி 15,000 ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 5 லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும் அவரது வழக்கு விசாரணை நவம்பர் 13ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொட்டாவ ஆனந்த வித்தியாலயத்தின் அதிபரே இலஞ்ச ஒழிப்பு ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் கடந்த 5 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டார்.