பக்கங்கள்

பக்கங்கள்

3 செப்., 2013

மீண்டுமொரு போராட்டத்தை நாம் தூண்டவில்லை: விமலின் கருத்துக்கு சுரேஷ் எம்.பி. கண்டனம்

வடக்கில் பிரிவினைவாதத்தைத் தூண்டி எதிர்காலத்தில் மீண்டுமொரு போராட்டத்தை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதியும் அவருடைய அமைச்சரவையில் அங்கத்துவம் வகிக்கின்ற அமைச்சர்களுமே
முற்பட்டு வருகின்றனர். இந்நிலையில் எம்மை மீண்டுமொரு ஆயுதப் போராட்டத்தை வடக்கில் ஏற்படுத்துவதற்கு முற்பட்டுவருவதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளமை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 27ஆம் திகதி மன்னார்ப் பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் நான் இனவாதக் கருத்துக்களைக் கூறி வடக்கில் மீண்டுமொரு ஆயுதப் போராட்டத்தை தூண்டி விட முற்படுகின்றேன் எனவும் எனக்கு எதிராக உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளவேண்டுமெனவும் அரசாங்க ஊடகங்களின் ஊடாக அமைச்சர் விமல் வீரவன்ச பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்.
உண்மையில் நான் அக்கூட்டத்தில் இனவாதக் கருத்துக்களைத் தெரிவிக்கவில்லை. அரசாங்க ஊடகங்கள் நான் தெரிவித்த கருத்தை திரிவுபடுத்தி வெளியிட்டுள்ளது. இதனை தமிழ் மற்றும் ஆங்கில பாண்டித்தியம் அற்ற விமல் வீரவன்ச பிழையாக விளங்கிக் கொண்டு கருத்துக்களைக் கூறி வருகின்றார்.