பக்கங்கள்

பக்கங்கள்

9 செப்., 2013

ஜெனீவாவில் இன்று மனித உரிமை மாநாடு : அறிக்கையை நவநீதம்பிள்ளை சமர்பிக்கிறார்.
ஐ.நா. மனித உரிமை அமைப்பின் 24-வது கூட்டம் இன்று ஜெனிவா நகரில் நடக்கிறது. இன்று துவங்கும் மாநாடு 27-ம் தேதி வரை நடக்கிறது.இக்கூட்டத்தில் 20 நாடுகளில் நடந்த
மனித உரிமை மீறல்கள் குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.


இதில் இலங்கையில் உள்நாட்டு போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்த அறிக்கையினை, ஐ.நா. மனித உரிமை ஆணைய தலைவர் நவநீதம்பிள்ளை சமர்பிக்கிறார். 
கடந்த மாதம் 7 நாள் பயணமாக இலங்கை சென்று போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் நிலை குறித்தும், அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ள மறுவாழ்வு பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார். இதற்கான அறிக்கையினை இன்று தாக்கல் செய்கிறார்.