பக்கங்கள்

பக்கங்கள்

22 செப்., 2013

வவுனியா மாவட்ட விருப்பு வாக்குகள் – முதலிடத்தில் மருத்துவர் சத்தியலிங்கம்

வவுனியா மாவட்டத்தில் இருந்து வடக்கு மாகாணசபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள வேட்பாளர்கள் பெற்றுள்ள விருப்பு வாக்குகளின் விபரங்களை வவுனியா மாவட்ட செயலகம் வெளியிடப்பட்டுள்ளது. 

இதன்படி தமிழரசுக்கட்சி சார்பில் போட்டியிட்ட மருத்துவகலாநிதி சத்தியலிங்கம் அதிக விருப்புவாக்குகளுடன்  முதலாவதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் தெரிவான இருவருமே சிங்களவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை தமிழரசுக் கட்சி 
1.மருத்துவகலாநிதி ப.சத்தியலிங்கம் -19,656 வாக்குகள்
2.கந்தர் தாமோதரம் லிங்கநாதன் -11,901 வாக்குகள்
3.ம.தியாகராசா - 11,681 வாக்குகள்
4.ஐ.இந்திரராசா - 11, 535 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
1.தர்மபால செனவிரத்ன - 5,148 வாக்குகள்
2.ஏ.ஜயதிலக - 4,806 வாக்குகள்