பக்கங்கள்

பக்கங்கள்

20 செப்., 2013

கிளிநொச்சியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் ஈபிடிபி மற்றும் இராணுவத்தினர்: தேர்தல் ஆணையாளருக்கு சிறீதரன் எம்பி கடிதம்
கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் இராணுவத்தினரும் ஈபிடிபி ஒட்டுக்குழுவும் இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக நேற்றைய தினமும் இன்றைய தினமும் தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுவருவது குறித்து உடன் நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணையாளருக்கு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவசர கடிதம் அனுப்பியுள்ளார்.
18ம் திகதி நள்ளிரவோடு தேர்தல் பரப்புரைகள் நிறுத்தப்பட வேண்டும் என்ற தேர்தல் ஆணையாளரின் உத்தரவினை மீறி அரசாங்கம் செயற்படுவதானது, தேர்தலின் நீதித் தன்மை குறித்து மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.