பக்கங்கள்

பக்கங்கள்

6 செப்., 2013

சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் அமைந்துள்ள ஜ.நா வளாகத்தில் இன்று (05.09.2013) அதிகாலை தீக்குளித்த நபர் இன்று மாலை 17.00 மணியளவில் மரணமடைந்ததாக தெரியவந்துள்ளது. இவர் எரிந்த இடத்தில் தமிழீழத் தேசியத்தலைவரின் நிழற்படம் இருந்ததாகவும். சில ஆவணங்கள் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. இவர் சுவிற்சர்லாந்தின் சியோன் பகுதியை வதிவிடமாக் கொண்டவர் எனவும் தாயகத்தின் புங்குடுதீவை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது. இன்று மாலை இவர் எரிந்த இடத்தில் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.