பக்கங்கள்

பக்கங்கள்

29 செப்., 2013

ஈ.பி.டி.பி அமைப்பாளரின் கொலை வெறியாட்டம்
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சிக்கான இரத்தினபுரம் அமைப்பாளரும் உழவுயந்திரச் சங்கத் தலைவருமான சிவகுமார் என்பவர் கூரிய கற்களாலும், இரும்புக் கம்பிகளாலும் அதே கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி ரவிச்சந்திரன் (செல்வம்)  வயது 47 என்னும் குடும்பஸ்தரை கடுமையாகத் தாக்கியுள்ளார்.
இவர் படுகாயம் அடைந்த நிலையில் தற்பொழுது கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வடமாகாண சபைத் தேர்தலில் தோல்வியின் எதிரொலியாக இச்சம்பவம் இடம்பெற்றமையானது பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.