பக்கங்கள்

பக்கங்கள்

30 செப்., 2013

லண்டனில் கள்ள கிறடிட் காட்டில் பண மோசடியில் ஈடுபட்ட இலங்கையர்கள் கைது

லண்டனில் கள்ள கிறடிட் காட்டில் பண மோசடியில் ஈடுபட்ட இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளளனர்.  தன்னியக்க கருவியில் பண மோசடி செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில்
இலங்கை பிரஜைகள் நால்வர் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரித்தானியாவின் க்ளொவ்ஸ்டர்செயர் பிரதேசத்தில் தொடர்ச்சியான தன்னியக்க கருவியில் பண மோசடி செய்துள்ளனர்.
குரொய்டன் தென் முடிவு பாதையை சேர்ந்த 21 வயதான பஸீர் முஸ்தபா, 22 வயதான அசோக் பாலசுப்பிரமணியம், 50 வயதான தங்கவேல் வேலாயுதம் மற்றும் மிடில்செக்ஸ் பேனார்ட் காடன் பிரதேசத்தைச் சேர்ந்த குசலகுமார் சிதம்பரப்பிள்ளை ஆகிய நால்வருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் கடந்த 23ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு நேற்று நீதிமன்றில் ஆர்படுத்தப்பட்டுள்ளனர்.  இவர்கள் மீது பிரித்தானிய வங்கிகளில் வங்கி அட்டைகளின் மூலம் முறைகேடுகளை மேற்கொண்ட குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.