பக்கங்கள்

பக்கங்கள்

3 செப்., 2013

போலி ஆவணங்களை தயாரித்து வங்கியில் கடன் பெற்ற ஆசிரியை கைது! புத்தளத்தில் சம்பவம்
போலி ஆவணங்களை தயாரித்து வங்கியிலிருந்து ஒரு லட்சம் ரூபாவை கடனாக பெற்ற ஆசிரியை ஒருவரை புத்தளம் பிரிவு விசேட குற்றப்புலனாய்வு பிரிவினர் இன்று திங்கட்கிழமை கைது செய்துள்ளனர்.
தான் கற்பித்த பாடசாலையின் அதிபர் மற்றும் புத்தளம் வலய கல்வி காரியாலயத்தின் நிதியுதவியாளர் ஆகியோரின் கையொப்பங்களை குறித்த ஆசிரியை போலியாக இட்டே வங்கியிலிருந்து கடனை பெற்றுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
அதுமட்டுமன்றி இறப்பர் முத்திரையும் அவர் போலியாக தயாரித்துள்ளார்.
அந்த ஆசிரியையின் பிறப்புச் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டையையும் போலியானது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.