பக்கங்கள்

பக்கங்கள்

11 செப்., 2013

யாழ்ப்பாணம் கச்சாயில் தாயும் மகளும் கொலை
யாழ்ப்பாணம் கொடிகாமம் கச்சாய் பகுதியில் இன்று அதிகாலை குடும்பஸ்தர் ஒருவர் தமது மனைவியையும் மகளையும் கொலை செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த தகவலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். 39 வயது தாயொருவரும் 18 வயது மகளுமே கொலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர் கத்தியால் குத்தியே இருவரையும் கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான முறைப்பாட்டை குறித்த குற்றம் சுமத்தப்பட்டுள்ள குடும்பஸ்தரின் மகன் பொலிஸில் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.