பக்கங்கள்

பக்கங்கள்

30 செப்., 2013

லாலு பிரசாத் குற்றவாளி :
 3ம் தேதி தண்டனை விவரம்
 


பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்டீரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என பரபரப்பு தீர்ப்பளித்தது ராஞ்சி சிபிஐ கோர்ட்.   லாலு பிரசாத்துடன் வழக்கில் சேர்க்கப்பட்ட
45 பேரும் குற்றவாளியே என தீர்ப்பளித்தது ராஞ்சி கோர்ட்.



1990ம் ஆண்டு  பீகார் முதல்வராக இருந்தபோது மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் சிக்கினார்  லாலு பிரசாத்.  மாட்டுத்தீவனத்திற்காக 37.7 கோடி ஊழல் என கருவூலத்தில் முறைகேடு என புகார் தெரிவிக்கப்பட்டது.  இதையடுத்து லாலு  பிரசாத் யாதவ் உள்ளிட்டோர் மீதான வழக்கு ராஞ்சி சிபிஐ கோர்ட்டில் நடைபெற்றது வந்தது.

லாலு உள்ளிட்டோருக்கு அக்டோபர் 3ம் தேதி தண்டனை அளிக்கப்படுகிறது.