பக்கங்கள்

பக்கங்கள்

29 செப்., 2013

சுழற்சி முறையில் போனஸ் ஆசனம்: கூட்டமைப்பின் கட்சித் தலைவர்களுக்கிடையிலான கூட்டத்தில் தீர்மானம்
வடக்கு மாகாணசபை அமைச்சர்கள் குறித்து இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக கூட்டப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கட்சித் தலைவர்களுக்கிடையிலான கூட்டத்தில் தீர்மானங்கள் எவையும் எடுக்கப்படாத
நிலையில் போனஸ் ஆசனங்கள் பங்கீடு தொடர்பில் மட்டும் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது.
முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தலைமையில் யாழ்.நகரில் இன்று மாலை 4 மணிக்கு கூடிய மேற்படி தலைவர்களுக்கிடையிலான கூட்டம் 6.30 மணிவரையில் இடம்பெற்றுள்ளது.
எனினும் அமைச்சர் தெரிவு குறித்து இறுதியான முடிவுகள் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ள கட்சித் தலைவர்கள், கூட்டமைப்பின் போனஸ் ஆசனங்கள் இரண்டில் ஒன்று மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த அயூப் அஷ்மி என்பவருக்கும், மற்றய ஆசனம் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மேரிகமலா குணசீலன் என்பவருக்கு சுழற்சி முறையில் வழங்குவதெனவும் தீர்மானிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் சுழற்சி முறையில் முதலில் மேரிகமலா குணசீலனும், அடுத்ததாக மலைய மக்கள் சார்ந்த ஒருவரும் அதன் பின்னர் இன்னொரு வரும் கட்சியினால் நியமிக்கப்படுவார் என்ற தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமைச்சர்கள் தெரிவு குறித்த ஆராய்வதற்காக முதலமைச்சர் தலைமையில் கட்சித் தலைவர்கள் மீளவும் கூடி ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.