பக்கங்கள்

பக்கங்கள்

26 செப்., 2013

சுவிட்சர்லாந்தில் இத்தாலி மொழி பேசும் திசினோ மாநிலத்தில் பெண்கள் முகத்தை மூடி புர்கா அணிவதற்கு தடை விதிக்கப்பட உள்ளது
இதற்கென அம்மாநிலத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் புர்கா அணிவதற்கு தடைவிதிக்க வேண்டும் என 65 வீத மக்கள் வாக்களித்துள்ளனர்.
இதற்கு முஸ்லீம் அமைப்புக்களும் சர்வதேச மன்னிப்பு
சபையும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
குற்றத்தை புரிவோரும் புர்கா அணிந்து சென்று குற்றங்களை புரியலாம் என்றும் பொது இடங்களில் புர்கா அணிய தடைவிதிக்க வேண்டும் என்றும் அம்மாநில மக்கள் தெரிவித்துள்ளன.
ஏற்கனவே பிரான்ஸ் பெல்ஜியம் ஆகிய நாடுகளில் புர்கா அணிவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. தற்போது சுவிட்சர்லாந்தின் 26 மாநிலங்களில் ஒன்றான திசினோ மாநிலம் புர்கா அணிவதற்கான தடை சட்டத்தை கொண்டுவர உள்ளது.