பக்கங்கள்

பக்கங்கள்

18 செப்., 2013

புலிகளின் திருகோணமலை கட்டளைத் தளபதி பதுமன் விடுதலை

தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட கட்டளைத் படைகளின் தளபதி கேணல் பதுமன் என்ற சிவசுப்ரமணியம் வரதநாதனை திருகோணமலை மேல் நீதிமன்றம் இன்று விடுதலை செய்துள்ளது.
2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்
ட பின்னர் பதுமன் இராணுவத்திடம் சரணடைந்ததுடன், அவர் பயங்கராத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் இராணுவத்தினரை கொலை செய்தமை ஆகிய பிரதான குற்றங்கள் அவர் மீது சுமத்தப்பட்டிருந்தது.
எனினும் இந்த குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க போதுமான சாட்சியங்கள் இல்லை எனக் கூறி திருகோணமலை நீதிமன்றம் பதுமனை விடுதலை செய்துள்ளது.