பக்கங்கள்

பக்கங்கள்

19 செப்., 2013

தேர்தல் பிரச்சாரம் குறுந்தகவல்களின் ஊடாக தொடர்கின்றது
தேர்தல் பிரச்சாரம் குறுந்தகவல்களின் ஊடாக தொடர்வதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 
எதிர்வரும் 21ம் திகதி நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தல்களை முன்னிட்டு இவ்வாறு குறுந்தகவல் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வேட்பாளர்களும் அவர்களது ஆதரவாளர்களும் தொடர்ந்தும் குறுந்தகவல்களின் மூலம் விருப்பு வாக்கு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
தங்களது இலக்கங்களுக்கு வாக்களிக்குமாறு கோரி குறுந்தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ள நிலையில் இவ்வாறு வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.