பக்கங்கள்

பக்கங்கள்

13 செப்., 2013

ஆளும் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில், ஆளுநர் சந்திரசிறி கலந்து கொண்டது பிரச்சினைக்குரியது: கெஹெலிய
வடக்கில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்களை ஆதரித்து நடக்கும் தேர்தல் கூட்டங்களில் மாகாணத்தின் ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி கலந்து கொண்டமை பிரச்சினைக்குரியது என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி என்ற வகையில் தனது கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் போது அரச அதிகாரி என்ற வகையில் ஆளுநர் அதில் கலந்து கொள்ளலாம்.
ஆனால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி தலைவர் என்ற முறையில் ஜனாதிபதி கலந்து கொள்ளாத தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் ஆளுநர் கலந்து கொள்வது பொருத்தமற்றது என்றார்.
வடக்கு மாகாண சபைத் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் அந்த மாகாணத்தின் ஆளுநரான ஜீ.ஏ. சந்திரசிறி கலந்து கொண்டமை தொடர்பாக ஏற்பட்டுள்ள சர்ச்சை குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை கூறினார்.