பக்கங்கள்

பக்கங்கள்

26 செப்., 2013

கல்லூரி வாயிலில் மாணவி படுகொலை: கடலூரில் பட்டப்பகலில் பரபரப்பு
கடலூர் புனித ஜோசப் கல்லூரியில் முதுகலை பட்டப் படிப்பு படித்து வந்தவர் மகாலட்சுமி. இவர் வழக்கம்போல் கல்லூரி வகுப்பு முடிந்து வியாழக்கிழமை மதியம் வெளியே வந்துள்ளார். அப்போது மர்ம நபர்
ஒருவர் மாணவியை நெருங்கி, அவரின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் மாணவி துடிதுடித்து உயிரிழந்தார். இதையடுத்து அங்கிருந்து அந்த மர்ம நபர் தப்பித்துள்ளார்.

மாணவியின் கழுத்தை அறுத்து கொலை செய்தவர், மாணவிக்கு தூரத்து சொந்தரக்காரர் என கூறப்படுகிறது. 
இந்த சம்பவத்தால் கல்லூரி முன்பு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, மாணவியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 
கொலை குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாணையில் ஈடுபட்டனர். கொலையாளியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.