பக்கங்கள்

பக்கங்கள்

9 செப்., 2013

அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு விசா வழங்க அமெரிக்க தூதரகம் மறுப்பு
மக்கள் விவகாரம் மற்றும் மக்கள் தொடர்புகள் அமைச்சர் மேர்வின் சில்வா அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்வதற்காக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் சமர்ப்பித்திருந்த விசா விண்ணப்பத்தை தூதரகம் நிராகரித்துள்ளது.
அமைச்சசரின் மகன் மாலக்க சில்வா சமர்ப்பித்திருந்த விசா விண்ணப்பத்தையும் அமெரிக்க தூதரகம் நிராகரித்துள்ளது.
விசா பெறுவதற்கான சமர்ப்பிக்க வேண்டிய உரிய ஆவணங்களில் சில ஆவணங்கள் விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.