பக்கங்கள்

பக்கங்கள்

19 செப்., 2013

மகிந்த ராஜபக்சவின் வருகைக்கு எதிராக அணிதிரளுங்கள்: வட அமெரிக்கத் தமிழ் உறவுகளுக்கு நா.க.த.அரசாங்கம் அறைகூவல்
சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் அமெரிக்க வருகைக்கு எதிராக, அமெரிக்க மற்றும் கனேடியத் தமிழர்களை அணிதிரளுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த மாநாட்டில் பங்கெடுப்பதற்காக சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச நியூயோர்க் செல்லவிருக்கின்றார்.
இந்நிலையில் நியூயோர்க்கில் உள்ள ஐ.நாசபையின் முன்னால் அணிதிரண்டு, இனஅழிப்பாளி மகிந்த ராஜபக்சவின் இரத்தம் தோய்ந்த முகத்தினை அம்பலப்படுத்துவதோடு, தமிழர்களுக்கான நீதியினை அனைத்துலகின் முன் பொங்குதமிழென முழங்குவோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
எதிர்வரும் செப்ரெம்பர் 24ம் நாள் செவ்வாய்க்கிழமை, காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நியூ யோர் சிற்றியில் உள்ள ஐ.நா மையத்துக்கு முன்னர் இந்த எழுச்சி நிகழ்வு இடம்பெறவுள்ளது.