பக்கங்கள்

பக்கங்கள்

17 செப்., 2013

பிறேசில் - ஈழத்தவர் உதைபந்தாட்ட தெரிவு அணிகள் பிரான்சில் களமாட்டம்! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உறுதுணை!!

பிரான்ஸ் வாழ் ஈழத்தவர் விளையாட்டு களத்தில் பிரான்சில் உள்ள பிறேசில் நாட்டு தெரிவு அணிக்கும் , ஈழத்தவர் தெரிவு அணிக்கும் இடையிலான உதைபந்தாட்ட ஆட்டமொன்று இடம்பெறவுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுதுணையுடன் பிரான்சில் ஐரோப்பிய ரீதியிலான உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியொன்றிலேயே சிறப்பு ஆட்டமாக இந்த இரு தெரிவு அணிகளும் களமாட இருக்கின்றன.

பிரான்ஸ் தமிழீழ விளையாட்டுச் செயலகத்தின் முன்னெடுப்பில் இடம்பெறும் இந்தச் சுற்றுப் போட்டியானது கேணல் சங்கர் நினைவு சுற்றுக்கிண்ணமாக அமைகின்றது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (25-08-2013) காலை 9 மணிக்கு வழமையான ஸ்ரான் மைதானத்தில் (51 av Roger Salengro, 93120 La courneuve) இச்சுற்றுப் போட்டி இடம்பெறுகின்றது.